×

நாளை குடும்ப அட்டைதாரர் குறைதீர் முகாம்கள்

 

காஞ்சிபுரம், ஏப்.11: காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை குடும்ப அட்டைதாரர் குறைதீர் முகாம்கள் நடைபெற உள்ளது. இதுகுறித்து  காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை(சனிக்கிழமை) காலை 10 மணியளவில் காஞ்சிபுரம் வட்டம் கீழம்பி, உத்திரமேரூர் வட்டம் நெய்யாடுபாக்கம், வாலாஜாபாத் வட்டம் திருவங்கரணை, திருப்பெரும்புதூர் வட்டம் எறையூர் மற்றும் குன்றத்தூர் வட்டம் கரசங்கால் ஆகிய கிராமங்களில் பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம்கள் நடைபெற உள்ளன.

மேற்கண்ட கிராமங்களில் வசித்து வரும் பொதுமக்கள் தங்கள் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகல் குடும்ப அட்டை, கைப்பேசி பதிவு மாற்றம் செய்தலுக்கான கோரிக்கை மனுக்களை அளிக்கலாம். மேற்படி மனுக்கள் மீது உடன் தீர்வு காணப்படும். மேலும், மூன்றாம் பாலினத்தவர், பழங்குடியினர் மற்றும் நரிக்குறவர் சமுதாயத்தினைச் சேர்ந்தவர்கள் ஏதும் விடுபட்டிருப்பின் அவர்களும் புதிய குடும்ப அட்டைகள் பெறுவதற்குரிய மனுக்களை அளிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post நாளை குடும்ப அட்டைதாரர் குறைதீர் முகாம்கள் appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Kanchipuram district ,Collector ,Kalaichelvi Mohan ,Kanchipuram Taluk Keelambi ,Dinakaran ,
× RELATED மதுராந்தகத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி