×

மாமல்லபுரம் இசிஆர் சாலையில் பட்டுப்போன மரங்கள் பொக்லைன் மூலம் அகற்றம்

மாமல்லபுரம், ஜன.10: மாமல்லபுரத்தில் இருந்து புதுச்சேரி செல்லும் இசிஆர் சாலை உள்ளது. இச்சாலை வழியே நாள்தோறும் அரசு பேருந்துகள், சொகுசு பேருந்துகள், வேன் மற்றும் கார் உள்பட ஏராளமான வாகனங்களில் மக்கள் சென்று வருகின்றனர். மாமல்லபுரம் அடுத்த, பூஞ்சேரி பேருந்து நிறுத்தம் எதிரே இசிஆர் சாலையோரம் சுமார் 60 அடி உயரமான 2 பனை மரங்கள் பட்டுப்போய் பரிதாபமாக காட்சியளித்தது. இந்த மரங்கள் லேசான காற்று அடித்தாலே சாலையோரம் மிகத் தாழ்வாக சாய்கிறது. இதனால், அந்த மரங்கள் எந்நேரத்திலும் உடைந்து மாமல்லபுரம்-புதுச்சேரி செல்லும் இசிஆர் சாலையில் முறிந்து விழுந்து விபத்து ஏற்படும் அபாயநிலை இருந்தது.

அந்த பட்டுப்போன மரங்கள் சாலையோரமாக சாயும்போது, காய்ந்த மரத்துகள்கள் அவ்வழியே செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் உள்ளூர் மக்கள் கண்களை பதம் பார்க்கிறது. இதனால், வாகன ஓட்டிகளும், உள்ளூர் மக்களும் கடும் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். இதனை மின் ஊழியர்களோ? நகராட்சி நிர்வாகமோ? அல்லது காவல்துறையோ யாருமே கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில், அந்த பட்டுபோன இரண்டு மரத்தில் ஒரு மரம் திடீரென முறிந்து அங்குள்ள மின்வயர் மீது விழுந்து மின்சாரம் தடைபட்டது. இதுகுறித்து, தகவலறிந்த மின் ஊழியர்கள் விரைந்து வந்து, மற்றொரு மரத்தையும் பொக்லைன் இயந்திரம் மூலம் அப்புறப்படுத்தி மின் வினியோகத்தை சீர் செய்தனர். இதனால், உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

Tags : Mamallapuram ECR ,Mamallapuram ,Puducherry ,Pooncheri ,Mamallapuram… ,
× RELATED மதுராந்தகத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி