- சர்வதேச ஜவுளி உச்சி மாநாடு
- காஞ்சிபுரம்
- சர்வதேச ஜவுளி உச்சி மாநாடு - 360
- தமிழக அரசின் ஜவுளித் துறை
- இந்தியத் தொழிற்துறையின் கூட்டமைப்பு
- சிஐஐ
- கோடிசியா வளாகம்
- கோவை…
காஞ்சிபுரம், ஜன.10: தமிழ்நாடு அரசு துணிநூல் துறை மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு (CII) இணைந்து நடத்தும் `International Textile Summit-360’ என்ற சர்வதேச ஜவுளி தொழில் மாநாடு இம்மாதம் 29 மற்றும் 30 ஆகிய தினங்களில் கோவை கொடீசியா வளாகத்தில் நடைபெற உள்ளது. 2030ம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டை பொருளாதார மாநிலமாக மாற்றும் முதலமைச்சரின் தொலைநோக்கு இலக்கை அடைய ஜவுளி தொழில் வளர்ச்சி முக்கிய பங்கு வகிக்கும் வகையில், இம்மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்மாநாட்டில் கருத்தரங்குகள் கண்காட்சி, வாங்குபவர் மற்றும் விற்பவர் சந்திப்பு மற்றும் அழகுநயப்பு காட்சி ஆகியவை இடம்பெற உள்ளன. மேலும், சுமார் 100 காட்சியரங்குகள் கொண்ட கண்காட்சியும் நடத்தப்பட உள்ளது.
இந்த கண்காட்சியில் காட்சியரங்குகள் அமைக்க விரும்பும் ஜவுளி தொழில் நிறுவனங்கள் வரும் 13ம் தேதிக்குள் சேலம் மண்டல துணை இயக்குநர் அலுவலக மின்னஞ்சல் ddtextilessalemregional@gmail.com மூலம் விண்ணப்பிக்கலாம்.
இந்நிகழ்வில் பங்கேற்பதன் மூலம், வெளிநாட்டு முதலீடு மற்றும் ஏற்றுமதிகள் அதிகரித்து, தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி அதிகரிக்கும். எனவே, அனைத்து ஜவுளித் தொழில் நிறுவனங்கள் மற்றும் ஜவுளித் தொழில் சங்கங்கள் இந்த சர்வதேச மாநாட்டில் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மண்டல துணை இயக்குநர் அலுவலகம், துணிநூல் துறை, 1A2/1 சங்ககிரி மெயின்ரோடு, குகை, சேலம் – 636 006. 0427-2913006 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு, ஜவுளித் தொழில் முனைவோர்கள் இவ்வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
