×

மதுராந்தகத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

மதுராந்தகம், ஜன.10: வருடந்தோறும் ஜனவரி 1 முதல் 31 வரை சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி மதுராந்தகம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் ராமமூர்த்தி தலைமையிலான போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக மதுராந்தகம் நகரில் இருசக்கர வாகனங்களில் இருவர் மட்டுமே செல்ல வேண்டும், தலைக்கவசம் அணிந்தபடி செல்வது, மூன்று பேர் செல்லக்கூடாது என்று அறிவுரை வழங்கி அனுப்பி வைக்கின்றனர். சிறுவர்கள் வாகனங்களை ஓட்டினால் அந்த வாகனங்களின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர். மதுராந்தகம் நகருக்குள் கனரக வாகனங்கள் காலை 7 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 9 மணி வரையிலும் வரக்கூடாது எனவும், மதுராந்தகம் அடுத்த அத்திமானம் தொடங்கி தொழுப்பேடு வரையிலான தேசிய நெடுஞ்சாலையோரங்களில் கனரக வாகனங்களை நிறுத்தக்கூடாது. இதனை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர். அனைவரும் போக்குவரத்து விதிகளை பின்பற்றினால் விபத்துக்கள் ஏற்படாது, எனவே அனைவரும் விதிகளை பின்பற்றி நடக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

Tags : Madurantakam ,Traffic Police Inspector ,Ramamoorthy ,
× RELATED சர்வதேச ஜவுளி தொழில் மாநாட்டில் பங்கேற்க நெசவாளர்கள் விண்ணப்பிக்கலாம்