×

நடிகர் கட்சியில் நடந்த ரகசிய வேட்பாளர் தேர்வால் அதிர்ச்சியில் இருக்கும் நிர்வாகிளை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘நேர்காணலே நடத்தாம ஒரு கட்சி ேவட்பாளர்களை அறிவிக்க இருப்பதால், கட்சியில் என்ன நடக்குது என்பதே தெரியாமல்  தொண்டர்கள் மய்யமான நிலையில் இருக்கிறார்களாமே, உண்மையா…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு கட்சியினர் இப்போவே தீவிரமாக தேர்தல் பணிக்கு தயாராகிட்டு வார்றாங்க. முக்கிய கட்சிகள் எல்லாம் ஒரு மாசத்துக்கு முன்னாடியே தொண்டர்கள் கிட்ட விருப்ப மனு வாங்கி, நேர்காணல நடத்தி முடிச்சு, கூட்டணி கட்சிகளுடன் பேசி முடித்து… தற்போது வேட்பாளர் அறிவிப்புக்கு ரெடியாக இருக்காங்க. ஒருசிலர், தனக்கு தான் எப்படியும் சீட்னு முடிவு பண்ணிட்டு, இப்போவே பிரசாரத்தையும் ஆரம்பிச்சுட்டாங்க. இது ஒரு பக்கம் இருக்க, மாங்கனி மாவட்டத்துல நடிகர் கட்சியின் எலெக்க்ஷன் மூவ்மென்ட் எல்லாம் ரொம்பவே சைலன்டா இருக்காம். குறிப்பாக, நடிகரின் மய்யம் கட்சியில நடக்குற எந்த விவகாரமும், எங்களுக்கு தெரியலனு நிர்வாகிங்க சிலரே ஷாக் ஆகி இருக்காங்களாம். நகர்ப்புற எலெக்சன்ல பலரும் சீட் வாங்கி போட்டியிடனும்னு ஆசை பட்டுருக்காங்க. ஆனா, யாருக்கும் தெரியாம ரகசியமா விருப்பமனு வாங்கி, வேட்பாளர் தேர்வே முடிஞ்சிருச்சாம். இந்த விவகாரம், கட்சியில உள்ளவங்களுக்கே பலருக்கும் தெரியலையாம். விஷயத்ைத லேட்டா கேள்விப்பட்ட சிலர், இது எப்போ நடந்ததுனு, புருவத்தை உசத்தி எதிர் கேள்வி கேட்குறாங்களாம்… இப்படி போனால் நாங்கள் எப்படி தேர்தல் வேலை செய்வோம்… கட்சி எப்படி அடுத்த கட்டத்துக்கு முன்னேறுவது என்று புலம்புகிறார்களாம் நிர்வாகிகள்…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘வடைக்காக காகம் காத்திருந்தது என்ற கதையை அரசியலில் எப்படி மாற்றி சொல்லாம்…’’ என சிரித்தபடி ேகட்டார் பீட்டர் மாமா.‘‘ நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொடடி மனுநீதி சோழன் மாவட்டத்தில் இலை  கட்சிக்கு விருப்ப மனு அளிக்கும் தேதி அறிவிக்கப்பட்டது. ஆனால் யாரும் விருப்ப  மனு அளிக்கவில்லையாம். உரிய ஆட்கள் இல்லாமல் போனதால் மாவட்டத்தின் மாவட்ட  செயலாளரும், மாஜி அமைச்சருமான ராஜ் கொதித்தெழுந்தார். தொடர்ந்து 10  ஆண்டுகள் ஆளுங்கட்சியாக இருந்த  கட்சிக்கு விருப்ப மனு அளிப்பதற்கு கூட ஆள்  இல்லையா என  நகர மற்றும் பேரூர் கழக செயலாளர்களை வறுத்தெடுத்தார்.  அதன்பின்னர் கட்சியினர் தேடி அழைந்து பெயரளவில் ஒரு சில நபர்களை அழைத்து  வந்து கட்டாயப்படுத்தி விருப்ப மனு அளிக்க வைத்தனர். ஆனால், நகர்ப்புற  தேர்தலில் அனைத்து வார்டுகளுக்கும் விருப்ப மனு யாரும் அளிக்கவில்லை.  இந்நிலையில் திருவாரூர் நகர பகுதியில் இருந்து வரும் 30 வார்டுகளில் 15  வார்டுகளுக்கு மட்டுமே ஒரு வழியாக கட்சியினரிடம் பேசி மனு அளிக்க  வைத்திருந்தனர். இந்நிலையில் இலை கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் விருப்ப  மனு அளித்தவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர். இதில் பெரும்பாலானவர்கள்  நேர்காணலுக்கு வராததால் டென்ஷனான மாஜி அமைச்சர், என்னப்பா இது பாரம்பரிய  கட்சிக்கே இந்தநிலையா… முன்பெல்லாம் விருப்ப மனு செய்ய வரும் நிர்வாகிகள் காத்திருப்பார்கள்… நாங்கள் லேட்டா வருவோம். ஆனால், நாங்கள் காத்திருக்கிறோம், வேட்புமனு தாக்கல் செய்ய யாரும் வரலையே… இதை பார்த்த காக்காவுக்காக வடை வைத்திருந்த கதையா இருக்கு…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘இலை கட்சியில் நடப்பதை பார்த்தால் ஒருவருக்கு ஒருவர் அல்வா கொடுப்பதில் சளைத்தவர்கள் இல்லை போலிருக்கே…’’ என்று பொடி வைத்து கேட்டார் பீட்டர் மாமா.‘‘அல்வா மாவட்டத்தில் இலை கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் நான் போட்டியிடுகிறேன்… நீ போட்டியிடாதே என்று பேசி கேள்விபட்டு இருப்போம். ஆனால், இந்த முறை ரிவர்சில் பலரும் நாங்க போட்டியில நீங்க போட்டியிடுங்க என்ற கை காட்டுகிறார்களாம். இதுல அக்கறையோ, விஸ்வாசமோ, கருணையோ கிடையதாம். தேர்தலில் செலவு செய்ய பணம் இல்லையாம். இதுதான் அல்வா மாவட்டத்தில் ஆள்காட்டி வேலை நடக்குதாம். அந்த கூட்டத்தில் பேசிய ஒருவர், 10 ஆண்டுகள் கட்சி ஆட்சியில் இருந்த போது சம்பாதித்தவர்களுக்கு மட்டுமே சீட் கொடுக்க வேண்டும் என்று 2 எழுத்து இனிஷியல் கொண்ட முன்னாள் எம்எல்ஏ ஒருவர் கொளுத்தி போட்டாராம். அதுக்கான காரணத்தையும் அவரே புட்டுவிடடு வைத்தாராம். பதவியில் இருந்தவர்கள் மேயர் பதவிக்கு போட்டியிடலாம். அப்போது அவர்கள் சம்பாதித்த பணத்தை வைத்து தன் பலத்தை காட்டலாம். எந்த பதவியும் இல்லாதவன், சம்பாதிக்காதவனுக்கு சீட் கொடுத்தால், ேதால்வி நிச்சயம். அவன் கடன் வாங்கியோ, தலைமை பணம் கொடுத்தால் தான் செலவு செய்ய முடியும் என்றாராம். அதற்கு மாஜி மாவட்ட செயலாளர் ஒருவர், தன்னை தான் ரகசியமாக குத்தி காட்டுகிறார்கள் என்பதை உணர்ந்து, நான் 4 முறை போட்டியிட்டு, மூன்று முறை வாகை சூடியவன். என்னை மேயர் பதவிக்கு போட்டியிட சொல்ல யாருக்கும் தகுதி கிடையாது என்று எகிறிவிட்டாராம். அதாவது அவருக்கும் மேயர் தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லை என்பதை மறைமுகமாக சொல்லிவிட்டாராம். கட்சியில் பணம் படைத்தவர்கள் உள்ளாட்சி தேர்தலில் இருந்து விலகி இருக்கவே நினைக்கிறார்களாம். ஆனால், தொண்டர்களோ இலை கட்சியே போட்டியிட வேண்டும் என்று கேட்டு வலியுறுத்த… மேயர் பதவிக்கு துண்டு போட்டு வைத்துள்ளதாம், தாமரை தலைமை… இது புரியாமல் இலையில் ஏன் சண்டை என்று சிரிக்கிறார்கள் தாமரை நிர்வாகிகள்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘அரசு கட்டின அலுவலகத்தில் வாஸ்து பார்க்கும் எம்எல்ஏவை பற்றி நினைத்தால் சிரிப்புதான் வருகிறது என்று மக்கள் பேசிக்கிறாங்களாமே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘தூங்கா நகரின், குன்றத்து இலைக்கட்சி எம்எல்ஏவானவர், தன் தொகுதிக்கென ஒதுக்கித் தரப்பட்டுள்ள எம்எல்ஏ அலுவலகத்தை திறக்க மறுக்கிறாராம். அதேநேரம், இதே பகுதியில் ஒரு கட்சி அலுவலகத்தை திறந்து வைத்து அதையே தன் எம்எல்ஏ அலுவலகம் எனக் கூறி வருகிறார். இதனால் குழப்பமடையும் தொகுதி மக்கள், எம்எல்ஏ அலுவலகம் சென்று பூட்டி கிடப்பதால் திரும்பிச் செல்லும் நிலையே இருக்கிறது. வெளியிலிருந்து வரும் இலைக்கட்சியினரும் இந்த அலுவலகத்தையே தேடி வந்து ஏமாந்து போகும் நிலை தொடர்கிறது. இதுகுறித்து கட்சியினர், பொதுமக்கள், எம்எல்ஏவிடம் கோரிக்கை வைத்தும் பிடிவாதம் பிடிக்கிறாராம். என்னவென்று விசாரித்தபோது, அந்த அலுவலகம் எனக்கு ராசியில்லை. வாஸ்து சரியில்லை. எவ்வளவு சர்ச்சைகள் வந்தாலும் அதைச் சரி கட்டுங்கள். எக்காரணம் கொண்டும் அந்த எம்எல்ஏ அலுவலகத்தை திறக்கச் சொல்லி டார்ச்சர் செய்யாதீங்க என நெருக்கமானவர்களிடம் உத்தரவாகவே சொல்லி விட்டாராம். அந்த அளவுக்கு இலை கட்சி எம்எல்ஏவை வாஸ்து ஆட்டி படைக்கிறதாம்….’’ என்றார் விக்கியானந்தா. …

The post நடிகர் கட்சியில் நடந்த ரகசிய வேட்பாளர் தேர்வால் அதிர்ச்சியில் இருக்கும் நிர்வாகிளை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : yananda ,Natama ,wiki ,
× RELATED நாட்டாமையை தாக்கிய 2 பேர் கைது