×

நாடாளுமன்ற தேர்தலிலேயே தீர்ப்பை மாற்றிய மக்கள் எடப்பாடி சொந்த ஊரிலேயே இந்த முறை டவுட்டாம்…

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த ஊரான சேலத்தில், கடந்த சட்டமன்றத் தேர்தலில் பெற்ற வெற்றி, இந்த முறை கேள்விக்குறியாக மாறியுள்ளது என்று கட்சியினர் புலம்பி வருகின்றனர். கொங்கு மண்டலத்தை ஒட்டிய சேலம் சரக மாவட்டங்கள் எப்போதும் அதிமுகவின் கோட்டை என்று நிர்வாகிகள் சிலர் கொக்கரித்து வருகின்றனர். அதிலும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியின் சொந்த ஊரான சேலத்தில் எங்களை அசைக்கவே முடியாது என்பது தொடரும் ஜம்பமாக உள்ளது. ஆனால் தற்போதைய நிலை தலைகீழாக உள்ளது. தமிழக முதல்வரின் அரிய திட்டங்களும், செயல்பாடுகளும் மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இதன் மூலம் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. இதற்கான முன்னுரையை நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலிலேயே, சேலம் மாவட்டத்து மக்கள் எழுதிவிட்டனர் என்கின்றனர் நடுநிலையாளர்கள். சேலம் மாவட்டத்தில் சேலம் தெற்கு, சேலம் வடக்கு, சேலம் மேற்கு, கெங்கவல்லி, ஆத்தூர், ஏற்காடு, சங்ககிரி, ஓமலூர், வீரபாண்டி, இடைப்பாடி, மேட்டூர் என்று 11 தொகுதிகள் உள்ளன. கடந்த 2021ம் ஆண்டு நடந்த சட்டமன்றத்தேர்தலில் அதிமுக கூட்டணி, இங்குள்ள 10 தொகுதிகளில் வெற்றி பெற்றது. சேலம் வடக்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ராஜேந்திரன், தற்போது சுற்றுலாத்துறை அமைச்சராக திறம்பட பணியாற்றி வருகிறார். 2021ம் ஆண்டு தேர்தலில் பல தொகுதிகளில் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தான் அதிமுக வெற்றியை தக்க வைத்தது.

2021ம் ஆண்டு திமுக ஆட்சி அமைந்த பிறகு வெற்றி பெறாத தொகுதி மக்களும் கொண்டாடும் வகையில் முதல்வரின் திட்டப்பணிகள் தனித்துவம் பெற்று விளங்கி வருகிறது. இதன்காரணமாக 2024ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு மக்கள் அமோக ஆதரவை வழங்கினர். குறிப்பாக வீரபாண்டி தொகுதியில் திமுகவிற்கு 1 லட்சத்து 3 ஆயிரத்து 830 வாக்குகள் கிடைத்தது. அதிமுகவிற்கு 78 ஆயிரத்து 695 வாக்குகள் மட்டுமே கிடைத்தது. ஓமலூரில் திமுகவிற்கு 99,519 வாக்குகளும், அதிமுகவிற்கு 95,966 வாக்குகளும் கிடைத்தது.

சேலம் மேற்கு தொகுதியில் திமுகவிற்கு 95,935 வாக்குகளும், அதிமுகவிற்கு 73,947 வாக்குகளும் கிடைத்தது. சேலம் வடக்கு தொகுதியில் திமுகவிற்கு 96,039 வாக்குகளும், அதிமுகவிற்கு 55,731 வாக்குகளும் கிடைத்தது. சேலம் தெற்கு தொகுதியில் திமுகவிற்கு 89,177 வாக்குகளும், அதிமுகவிற்கு 64,77 வாக்குகளும் கிடைத்தது. இந்தவகையில் சேலம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 5 சட்டமன்ற தொகுதிகளில் அதிமுகவை விட, திமுக வேட்பாளர் அதிகளவில் வாக்குகளை பெற்று வெற்றியை பதிவு செய்தார். இதேபோல் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சேலம் மாவட்டத்தின் ஏற்காடு, கெங்கவல்லி, ஆத்தூர் சட்டமன்ற தொகுதிகள், தர்மபுரி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மேட்டூர் சட்டமன்ற தொகுதி, நாமக்கல் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சங்ககிரி சட்டமன்ற தொகுதி என்று அனைத்து தொகுதிகளிலும் அதிமுகவை விட, திமுக வேட்பாளர்கள் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை அதிகம் பெற்றிருந்தனர்.

இந்த தொகுதிகள் அனைத்திலும் கடந்த சட்டமன்றத் தேர்தலில் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தான், திமுகவின் வெற்றி வாய்ப்பு நழுவியது. அதேநேரத்தில் சிறப்பான ஆட்சிக்கு சாட்சியாக நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள், வாக்குகளை அள்ளி வழங்கினர். இப்படிப்பட்ட சூழலில் முதல்வரின் திட்டங்கள், அனைத்து தொகுதிகளிலும் கடைகோடி கிராமங்கள் வரை சென்று சேர்ந்துள்ளது. இது வரப்போகும் தேர்தலில் சேலம் மாவட்டத்தின் 11 தொகுதிகளிலும் திமுக கூட்டணியின் வெற்றிக்கு பெரும்துணையாக நிற்கும் என்கின்றனர் நடுநிலையாளர்கள்.

* அதிமுக, பாஜவை கதிகலங்க வைத்த கோவை ரிப்போர்ட்!
கோவை மாவட்டத்தில் தேர்தல் களம் அதிமுக குரூப்பிற்கு உதறலை ஏற்படுத்தியிருக்காம். சமீபத்தில் போலீஸ் உளவுத்துறை சர்வே செய்து ரிப்போர்ட் போட்டிருக்காம். கடந்த சட்டமன்ற தேர்தலில், சொற்ப ஓட்டுக்களில் 6 சட்டமன்ற தொகுதிகளை திமுக இழந்து விட்டது. அந்த தொகுதிகளில், திமுக தரப்பில் சாதாரண வேட்பாளர்கள் நின்னாலே 50 ஆயிரம் லீடிங்கில் வெற்றி கிடைக்கும். பிரபலமான வேட்பாளர்கள் நின்றால் லட்சத்தை தாண்டும் என சொல்லியிருக்காங்களாம். இதனால், திமுக தரப்புல மட்டுமில்லாம கூட்டணி கட்சியும் கோவைக்கு முக்கியத்துவம் கொடுத்து சீட் கேட்கிறார்களாம். இந்த ரிப்போர்ட் விவரம் தெரிஞ்ச பாஜ தரப்பு, கோவையை விட்டு விலகற ஐடியாவுல இருக்குதாம். திருப்பூர், ஈரோடு பக்கம் போனா ஜெயிக்க முடியுமா? என யோசிக்கிறாங்களாம்.

கோவை சிட்டிங் அதிமுக எம்எல்ஏக்கள் சிலர், போட்டியிட்டா அதிக பணத்தை வாரி இறைக்கணும், பேசாம உடல் நிலை சரியில்லைன்னு மருத்துவமனைக்கு போலாமா என திட்டம் போடறாங்களாம். கூட்டணி சேர்க்காம சொதப்பிட்டாங்க, விஜயகாந்த் கட்சி வர்ற மாதிரி இருந்துச்சு அதையும் அசால்டா விட்டுட்டாங்க. இப்ப வேற கட்சிக்காரங்க யாரும் காணோம். லெட்டர் பேடு அமைப்பும் சர்போர்ட்டுக்கு வரலை. பாஜ சேர்த்துட்டதால மத்த கட்சிக்காரங்க வெறுப்பா பாக்கிறாங்க. பிரசாரத்தில பாஜ காரங்களோட சேர்ந்து கோவை வீதியில் ஓட்டு கேட்டு போனா மானாவாரியாக பேசுவாங்க, எப்படி இருந்த நம்ம நிலைமை இப்படி ஆகி போச்சேன்னு அதிமுக முக்கிய நிர்வாகிகள் வெறுப்பா புலம்பிட்டு இருக்கிறாங்களாம்.

Tags : Dautam ,Salem ,Adimuka ,General Secretary ,Edappadi Palanisami ,Kongu ,Atamugawa ,
× RELATED அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 1 மாநிலங்களவை சீட் ஒதுக்கீடு!