×

மத்திய பிரதேசத்தில் பிகானீர்-பிலாஸ்பூர் விரைவு ரயிலில் தீ

உஜ்ஜைனி: பிகானீர்-பிலாஸ்பூர் விரைவு ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், அதனால் உயிர் சேதம் இல்லை என்றும் அதிகாரிகள் கூறினர். மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் அருகே நேற்று மாலை சென்று கொண்டிருந்த பிகானீர்-பிலாஸ்பூர் அதிவிரைவு ரயிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த ரயில் விபத்தானது தாரானா – தாஜ்பூர் பகுதிகளுக்கு இடையே நடந்தது. ரயிலின் பவர் காரில் தீ விபத்து ஏற்பட்டதால், உடனடியாக மீட்புக் குழுவினர் சென்று தீயை அணைத்தனர். இச்சம்பவம் குறித்து மேற்கு ரயில்வேயின் (ரத்லாம் கோட்டம்) மக்கள் தொடர்பு அதிகாரி கேம்ராஜ் மீனா கூறுகையில், ‘பிகானீர்-பிலாஸ்பூர் அதிவிரைவு ரயிலின் பவர் காரில் இருந்து தீயிலால் ஏற்படும் புகை வெளியானது. உடனடியாக தீயணைப்புக் குழுவினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

இந்தச் சம்பவத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை; உயிர் சேதமும் இல்லை. சில மணி நேர தாமதத்திற்கு பின் இந்த ரயில் வழக்கம் போல் இயக்கப்பட்டன’ என்றார். ரயிலின் பவர் காரில் தீ விபத்து ஏற்பட்டதால், ரயிலில் இருந்த பயணிகள் பீதியடைந்தனர். இருந்தும் சிறிய விபத்து என்று தெரியவந்ததால் நிம்மதியடைந்தனர். மேலும் இந்த ரயில் விபத்தால் இவ்வழியாக சென்ற மற்ற ரயில்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன.

The post மத்திய பிரதேசத்தில் பிகானீர்-பிலாஸ்பூர் விரைவு ரயிலில் தீ appeared first on Dinakaran.

Tags : Bikaner-Bilaspur Express ,Madhya Pradesh ,Ujjain ,-Bilaspur Express ,
× RELATED நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஜி...