×

பண்டிகைகள் காரணமாக மார்ச் 19, 20 தேதிகளில் மாநிலங்களவைக்கு விடுமுறை: சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

 

புதுடெல்லி: பண்டிகைகளையொட்டி வரும் 19,20 ஆகிய தேதிகளில் மாநிலங்களவை அமர்வுகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநிலங்களவை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் வௌியிட்ட அறிக்கையில், “மார்ச் 11ம் தேதி நடந்த வணிக ஆலோசனை குழு கூட்டத்தில், மார்ச் 19 முதல் நவராத்திரி, ரம்ஜான், குடிபத்வா போன்ற பல பண்டிகைகள் கொண்டாடப்பட உள்ளது. இதை கருத்தில் கொண்டு மாநிலங்களவை அமர்வுகளை நடத்துவது பொருத்தமற்றது என சில உறுப்பினர்கள் பரிந்துரைத்தனர்.

இதுதொடர்பாக முன் வைக்கப்பட்ட கோரிக்கைகளை அரசாங்கம் பரிசீலித்தது. அதன்படி, 2026 மார்ச் 19 வியாழக்கிழமை, மார்ச் 20 வெள்ளிக்கிழமை ஆகிய நாள்களில் நடைபெற இருந்த சபை அமர்வுகள் ரத்து செய்யப்படுகின்றன. இருப்பினும், இந்த நேரத்தை ஈடு செய்யும் விதமாக, மார்ச் 28 சனிக்கிழமை மற்றும் மார்ச் 29 ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில் அவை கூடும்” என தெரிவித்துள்ளார்.

Tags : Rajya Sabha ,C.P. Radhakrishnan ,New Delhi ,Business Advisory Committee ,Navratri ,
× RELATED கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு...