×

2026 தேர்தலில் அமோக வெற்றி பெற கங்கணம் கட்டிக்கொண்டு வேலை பார்க்க வேண்டும்: பாஜவினருக்கு நிர்மலா சீதாராமன் அறிவுரை

சென்னை: சென்னை அருகே பொத்தேரி தனியார் பல்கலைக்கழக விழாவில் கலந்துகொண்ட ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது: பாம்பன் பாலத்தை திறப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை (இன்று) இலங்கையிலிருந்து வருகிறார். அவருக்கு, நண்பர்களிலேயே உயர்ந்த நண்பர் என்ற உயரிய விருதினை இலங்கை அரசு நாளை (இன்று) வழங்க உள்ளது. மேலும், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட இலங்கை அரசு இதுபோன்ற அரிய, மிக உயர்ந்த விருதை வழங்க உள்ளது தமிழ்நாட்டிற்கு பெருமை.

இலங்கை அரசுடன் தமிழ்நாடு மற்றும் பாரதம் இரண்டும் சேர்ந்து நல்ல உறவை மேம்படுத்துவதே லட்சியமாக கொண்டு பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014ம் ஆண்டிலிருந்தே முயற்சி செய்து வருகிறார். ஒவ்வொரு முறையும் மீனவர்களின் விஷயத்தில் பிரதமர் மோடி தலையிட்டு மீனவர்களை காப்பாற்றி வருகிறார். முன்பு அமைக்கப்பட்டிருந்த பாம்பன் பாலத்தை விட தற்போது அதிநவீன டெக்னாலஜியுடன் பாலத்தை அமைத்து கொடுத்துள்ளார்.

அதுவும் நாளை (இன்று) ராம நவமி தினத்தன்று பிரதமர் நாட்டுக்காக பாம்பன் பாலத்தை திறந்து வைத்து அர்ப்பணிக்க உள்ளார்.  தமிழக மக்கள் மீது பிரதமர் நரேந்திர மோடி மிகுந்த பாசமும், அன்பும் வைத்துள்ளார். எனவே, வருகிற 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பாஜவினர் இன்று முதல் கங்கணம் கட்டி வேலையை செய்யுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

The post 2026 தேர்தலில் அமோக வெற்றி பெற கங்கணம் கட்டிக்கொண்டு வேலை பார்க்க வேண்டும்: பாஜவினருக்கு நிர்மலா சீதாராமன் அறிவுரை appeared first on Dinakaran.

Tags : Amoka ,2026 ,Nirmala Sitharaman ,BJP ,Chennai ,Narendra Modi ,Sri Lanka ,Bombon Bridge ,Union Finance Minister ,Potheri Private University Ceremony ,Gangnam ,2026 elections ,Bhajvinar ,
× RELATED மார்க்சிஸ்ட் தலைவர்கள் முதல்வருடன்...