- மோடி
- தமிழ்நாடு காங்கிரஸ்
- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- காங்கிரஸ்
- செல்வப்பெருந்தகை
- ஒன்றிய பிஜேபி ஊராட்சி
- இந்துத்துவா
சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்ட அறிக்கை: ஒன்றிய பா.ஜ. அரசு பிரதமர் மோடி தலைமையில் அமைந்து கடந்த 11 ஆண்டுகளாக இந்துத்வா கொள்கையை பரப்புகிற நோக்கத்தில், மக்களை மதரீதியாக பிளவுபடுத்தி தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. பிரதமர் மோடி அரசின் 11 ஆண்டுகால தமிழக விரோத போக்கை கண்டிக்கிற வகையில், தமிழகம் வருகிற பிரதமர் மோடிக்கு எதிராக ஏப்ரல் 6 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அனைத்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளும் கருப்புக் கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டுமென வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.
சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சார்பாக சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில், எனது தலைமையில் காலை 9.30 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இதில் பெருந்திரளான காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்று மோடிக்கு எதிராக எழுப்பப்படுகின்ற கண்டனக் குரல், தலைநகர் டெல்லியில் எதிரொலிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
The post பிரதமர் மோடியை கண்டித்து நாளை ஆர்ப்பாட்டம்: தமிழக காங்கிரஸ் தலைவர் அறிவிப்பு appeared first on Dinakaran.
