×

விம்கோநகர் ரயில் நிலையத்தில் 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

 

திருவொற்றியூர். ஏப்.4: விம்கோநகர் ரயில் நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த 500 கிலோ ரேஷன் அரிசியை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர். கொருக்குபேட்டை ரயில்வே காவல் உதவி ஆய்வாளர் பார்த்திபன், தலைமை காவலர் பழனி ஆகியோர், நேற்று முன்தினம் விம்கோ நகர் ரயில் நிலையத்தில் ரோந்து சென்றனர்.

அப்போது, நடைமேடையின் இருக்கைக்கு கீழே கேட்பாரற்ற நிலையில் கிடந்த மூட்டைகளை பிரித்து பார்த்தபோது 500 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. அதை பறிமுதல் செய்து, பட்டரவாக்கம், குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மேலும், வழக்கு பதிந்து அரிசி கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

 

The post விம்கோநகர் ரயில் நிலையத்தில் 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Vimkonagar railway station ,Thiruvottriyur ,Korukkupet Railway Police ,Sub-Inspector ,Parthiban ,Head Constable ,Palani ,Vimkonagar… ,
× RELATED காசிமேடு கடலில் ஆண் சடலம் மீட்பு