- கோவில் பங்குனி திருவிழா
- கொடி ஏற்றுதல்
- Thiruppuvanam
- பங்கூனி
- புஷ்பவனேஸ்வரர்-சௌந்தரநாயகி அம்பாள் கோவில்
- பங்கூனி விழா
- கண்ணன் பட்டர்
- செந்தில் பட்டர்
- சுப்பிரமணிய பட்டர்
- விவேக் பட்டர்
- கொடி ஏற்றுதலுடன்
திருப்புவனம், ஏப். 3: திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர்-சவுந்தரநாயகி அம்பாள் கோயிலில் பங்குனி மாதம் 10 நாட்கள் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். நேற்று பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்ற பூஜைகளை கண்ணன் பட்டர், செந்தில் பட்டர், சுப்பிரமணிய பட்டர், விவேக் பட்டர், ராஜா பட்டர் செய்தனர். ஏப். 9ம் தேதி தேதி காலை 11 மணிக்கு சுவாமி அம்பாளுக்கு திருக்கல்யாணமும், 10ம் தேதி காலை 9 மணிக்கு தேரோட்டமும் நடைபெற உள்ளது. 12ம் தேதி உற்சவ சாந்தியுடன் விழா நிறைவு பெறுகிறது. தினசரி அம்பாளும் சுவாமியும் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றனர். ஏற்பாடுகளை தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் தண்ணாயிரம் மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.
The post கோயில் பங்குனி திருவிழா; கொடியேற்றத்துடன் துவக்கம் appeared first on Dinakaran.
