×

10 கல்லூரி தொடங்க அறிவிப்பு கொடுக்கப்பட்டதில் பல சட்ட போராட்டங்களுக்கு பிறகு 4 கல்லூரிகள் திறப்பு: அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்

பேரவையில் கேள்வி நேரத்தின் போது காரைக்குடி எஸ்.மாங்குடி(காங்கிரஸ்) பேசுகையில், “காரைக்குடி தொகுதி, தேவக்கோட்டையில், இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் மகளிர் கலைக்கல்லூரி துவக்க அரசு முன் வருமா? என்றார்.

இதற்கு பதில் அளித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசியதாவது: 10 கல்லூரிகளை தொடங்க அறிவிப்பு கொடுத்திருந்தோம். பல்வேறு சட்ட போராட்டங்களுக்கும், நீதிமன்ற வழக்குகளுக்கும் பிறகு 4 கல்லூரிகள் திறக்கப்பட்டு இருக்கின்றன. மீதம் இருக்கின்ற 6 கல்லூரிகளுக்கு நீதிமன்றம் பல்வேறு வழிகாட்டுதல்களை வகுத்திருக்கின்றது. அந்த வழிகாட்டுதல்களை முடித்த பிறகு, பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே. மணி, லால்குடி உறுப்பினர் சௌந்தரபாண்டியன், திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் சந்திரன் ஆகியோர் உள்ளிட்ட பல சட்டமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றி தரப்படும்” என்றார்.இவ்வாறு விவாதம் நடந்தது.

The post 10 கல்லூரி தொடங்க அறிவிப்பு கொடுக்கப்பட்டதில் பல சட்ட போராட்டங்களுக்கு பிறகு 4 கல்லூரிகள் திறப்பு: அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல் appeared first on Dinakaran.

Tags : Minister ,B. K. Sekarpapu ,Karaikudi S. ,Berawai ,Mangudi ,Congress ,Women's College of Arts ,Karaikudi ,Devakkota ,Hindu ,Minister of ,Religious Affairs ,P. K. Sekarpapu ,B. K. ,Sekarbaba ,
× RELATED யார் களத்தில் இருக்கிறார்கள் என்பதை...