- பட்டங்காடு தொடக்கப்பள்ளி
- அறந்தாங்கி
- பட்டங்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி
- Manamelkudi
- பட்டங்காடு அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி
- மணமேல்குடி ஊராட்சி ஒன்றியம்
- புதுக்கோட்டை மாவட்டம்…
- தின மலர்
அறந்தாங்கி, ஏப்.2: மணமேல்குடி அருகே பட்டங்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி ஊராட்சி ஒன்றியம் பட்டாங்காடு அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வன்கொடுமைகளுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கோட்டைப்பட்டினம் மகளிர் காவல் நிலையத்தில் இருந்து பெண் காவலர்கள் கார்த்திகா மற்றும் ரமிலா இருவரும் மாணவர்களுக்கு ‘பேட் டச்’ ‘குட் டச்’ பாலியல் வன்கொடுமைகள் குறித்து விழிப்புணர்வினை வழங்கினர்.
குழந்தைகள் தங்களை தொடுவதற்கு யாரையும் அனுமதிக்க கூடாது என்றும், ‘பேட் டச்’, ‘குட் டச்’ குறித்த விளக்கங்களும் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில், வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு சிவயோகம் கலந்து கொண்டார். இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெகதீஸ்வரி மற்றும் ஆசிரியர் செபஸ்தியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
The post பட்டங்காடு தொடக்கப் பள்ளியில் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான விழிப்புணர்வு appeared first on Dinakaran.
