×

ஓசூரில் அறிவியல் பூங்கா அமைக்க பூமி பூஜை விழா

ஓசூர், மார்ச் 30: ஓசூர் மாநகராட்சியில், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ், மாநகராட்சி வார்டு 34 ராமநாயக்கன் ஏரி அரசு பூங்கா வளாகத்தில் சுமார் ₹3.24 கோடி மதிப்பில் அறிவியல் பூங்கா அமைக்கப்படுகிறது. இதற்கான பூமி பூஜை விழா நடந்தது. இதில் மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்எல்ஏ, மேயர் சத்யா ஆகியோர் கலந்து கொண்டு, பூஜை செய்து பணிகளை துவங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் துணை மேயர் ஆனந்தய்யா, மண்டல குழு தலைவர் ரவி, மாமன்ற உறுப்பினர் நரேஷ், வார்டு செயலாளர் மாதேஷ், திராவிட கழகம் வனவேந்தன், அரசு அதிகாரிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

The post ஓசூரில் அறிவியல் பூங்கா அமைக்க பூமி பூஜை விழா appeared first on Dinakaran.

Tags : Bhoomi Puja ceremony ,Hosur ,Corporation ,Ramanayakkan Lake Government Park ,Ward 34 ,Dinakaran ,
× RELATED ஓசூரில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி ஆர்ப்பாட்டம்