ஓசூர், டிச.23: ஓசூர் ஒன்றியம், சென்னசந்திரம் ஊராட்சியில் உள்ள ஐடி பார்க் வளாகத்தில் எல்கோஸ்ஜி-ல் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் மூலம், சுமார் ரூ.3 கோடியே 37 லட்சத்து 52 ஆயிரம் மதிப்பில் புதிதாக சிமெண்ட் சாலை அமைக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்எல்ஏ கலந்து கொண்டு, பூமி பூஜை செய்து, சிமெண்ட் சாலை பணிகளை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் கஜேந்திர மூர்த்தி, ஒன்றிய துணை செயலாளர் வீரபத்திரப்பா, முன்னாள் ஒன்றிய குழு துணை தலைவர் நாராயணசாமி, பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் பாலாஜி, ஆனந்த், அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
