கிருஷ்ணகிரி, டிச.23: கிருஷ்ணகிரி அம்மன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம், லாரி டிரைவர். இவரது மனைவி விஜயலட்சுமி(51). நேற்று முன்தினம் இரவு, விஜயலட்சுமி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது மாஸ்க் அணிந்த மர்ம நபர் ஒருவர் வீட்டிற்குள் நுழைந்தார். அந்த நபர் விஜயலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பியோடி விட்டார். விஜயலட்சுமியின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு திரண்டனர். இதுகுறித்து விஜயலட்சுமி, கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். நகையை பறித்து சென்ற நபருக்கு 30 முதல் 35 வயதிற்குள் இருக்கும். இதையடுத்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று போலீசார் ஆய்வு செய்தனர். மேலும், இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
