- அய்யலூர்
- வேடசந்தூர்
- கண்ணதாசன்
- கண்டியன்குப்பம்
- திருவண்ணாமலை மாவட்டம்
- திருவண்ணாமலை
- பிறகு நான்
- திருச்சி-திண்டுக்கல்…
- தின மலர்
வேடசந்தூர், மார்ச் 29: திருவண்ணாமலை மாவட்டம் கண்டியாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் கண்ணதாசன் (37). லாரி டிரைவர். இவர் லாரியில் உர மூட்டைகளை ஏற்றி கொண்டு திருவண்ணாமலையிலிருந்து தேனி நோக்கி சென்று கொண்டிருந்தார். நேற்று அதிகாலை 3 மணியளவில் திருச்சி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அய்யலூர் அருகே புதுவாடி புதூர் பகுதியில் வந்த போது லாரி திடீரென பழுதாகி நின்றது.
அப்போது புதுக்கோட்டை மாவட்டம், கரம்பக்குடி பகுதியை சேர்ந்த 17 பேர் ஒரு வேனில் கேரள மாநிலம் மூணாறு பகுதிக்கு சுற்றுலா சென்று கொண்டிருந்தனர். எதிர்பாராத விதமாக வேன் லாரியின் பின்னால் மோதியது. இதில் வேன் டிரைவர் மருதங்கம் விடுதி பகுதியை சேர்ந்த அருள் (22) மற்றும் வேனில் இருந்த தித்தானிபட்டியை சேர்ந்த கோகுல் (20) உள்பட 5 பேர் காயமடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வையம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post அய்யலூர் அருகே லாரி மீது வேன் மோதி 5 பேர் காயம் appeared first on Dinakaran.
