வேலாயுதம்பாளையம், ஜன. 14: கரூர் மாவட்டம் புகளூர் காகித ஆலை, புன்னம் சத்திரம் செல்லும் சாலையில் உள்ள ஒரு தனியாருக்கு சொந்தமான கார்டன் அருகே சாலையின் நடுவே நின்று கொண்டு மது அருந்திக்கொண்டு பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்திக் கொண்டிருப்பதாக வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. வேலாயுதம்பாலையம் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று மடக்கிப்பிடித்தனர். விசாரணையில் மூலிமங்கலம் பகுதியைச் சேர்ந்த செல்லப்பன் (37). கூலித் தொழிலாளி என்றும் போதையில் இருந்ததும் தெரியவந்தது. போலீசார் செல்லப்பனை தீவிரமாக விசாரிக்கின்றனர்.
