- கிராமப்புற பொங்கல் விழா
- மலையம்பட்டி
- சுற்றுலா துறை
- பெரம்பலூர்
- மாவட்ட கலெக்டர்
- மிருணாளினி
- பொங்கல்
- பொங்கல் சுற்றுலா விழா
பெரம்பலூர்,ஜன.14: மலையாளப்பட்டி கிராமத்தில் சுற்றுலாத்துறையின் சார்பில் இன்று(புதன்கிழமை) கிராமிய பொங்கல் விழா நடைபெறவுள்ளதாக மாவட்டக் கலெக்டர் மிருணாளினி தகவல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது :பொங்கல் சுற்றுலா விழாவை சிறப்பாகக் கொண்டாடும் வகையில், பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அரசின் சுற்றுலாத் துறையின் சார்பில் பல்வேறு தமிழக கிராமிய கலை நிகழ்ச்சிகளுடன்கூடிய பொங்கல் விழா வேப்பந் தட்டை ஒன்றியத்திற்குட்பட்ட மலையாளப்பட்டி கிராமத்தில் இன்று (புதன்கிழமை) காலை நடைபெறவுள்ளது.
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை கிராமப் பொது மக்களுடன் இணைந்து கொண்டாடும் வகையில் நடத்தப்படவுள்ள இந்த பொங்கல் விழாவில், தமிழ்நாட்டின் பரதம், ஒயில், கும்மி உள்ளிட்ட கிராமிய கலைநிகழ்ச்சிகள், தமிழக பாரம்பரிய விளையாட்டு போட்டிகள், பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுகள் நடத்தப்படவுள்ளது. கிராமிய மணம் சார்ந்த இந்நிகழ்வில், மக்களோடு மக்களாக அனைத்துத்துறைகளின் அலுவலர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
