மயிலாடுதுறை, ஜன.14: தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பின்படி, மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களில் முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழா \\”இது நம்ம ஆட்டம் 2026\\” போட்டிகள் 22.1.2026 முதல் 25.1.2026 வரையும், மாவட்ட அளவிலான போட்டிகள் மாவட்ட விளையாட்டு அரங்கில் 30.1.2026 முதல் 1.2.2026 வரையும், மாநில அளவிலான போட்டிகள் 6.2.2026 முதல் 8.2.2026 வரை நடைபெறவுள்ளது.
போட்டிகளில் பங்கேற்க வயது வரம்பு 16 வயது முதல்35 வரை (1.1.1991-க்கு பின்னரும் 31.12.2009க்கு முன்னரும் பிறந்தவர்கள்) தகுதியுடையவர்கள். ஒன்றிய அளவிலான போட்டிகளில் முதல் இடம் பெறும் வீரர், வீராங்கனைகள் மற்றும் அணிகள் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள தகுதி பெறுவர். 100 மீட்டர் ஓட்டம் மற்றும் குண்டு எறிதல், கபடி, வாலிபால், கேரம், கயிறு இழுத்தல், தடகளம், ஸ்ட்ரீட் கிரிக்கெட் ஆகிய போட்டிகள் நடத்தப்படவுள்ளது.
