- டாஸ்மாக்
- அரியலூர் மாவட்டம்
- அரியலூர்
- தமிழ்நாடு மாநில வணிகம் மற்றும் தொழில் சபை
- திருவள்ளுவர் தினம்
- குடியரசு தினம்
அரியலூர், ஜன.14: அரியலூர் மாவட்டத்தில் ஜன.16ம் தேதி திருவள்ளுவர் தினம் மற்றும் ஜனவரி 26ம் தேதி குடியரசு தினம் ஆகிய தினங்களை முன்னிட்டு தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் டாஸ்மாக் கடைகள் அனைத்திற்கும் 16ம் தேதி,26ம் தேதி ஆகிய 2 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்படுகிறது என மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் டாஸ்மாக் கடைகள் அனைத்து அரசு மதுபான சில்லரை விற்பனை கடைகள், மதுபான சில்லரை விற்பனை கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் FL3 உரிமம் பெற்ற தனியார் மதுபானக்கூடங்கள் ஆகிய அனைத்திற்கும் வருகிற 16ஆம்தேதி வெள்ளிக்கிழமை திருவள்ளுவர் தினம், வருகிற 26ஆம்தேதி திங்கட் கிழமை குடியரசுதினம் ஆகிய தினங்களை முன்னிட்டு 2 நாள் மட்டும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது என மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி வெளியிட்டுள்ள அந்த செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
