×

பாஜ தலைவர் அண்ணாமலை கருப்புக்கொடி போராட்டம்

சென்னை: பாஜ மாநில தலைவர் அண்ணாமலை நேற்று கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்டார். தமிழகத்தில் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக அரசு நடத்திய கூட்டத்தை கண்டித்து, பாஜவின் கருப்புக்கொடி போராட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்தார். இதன் அடிப்படையில், நேற்று காலை அண்ணாமலை தனது இல்லத்தின் முன்பு கருப்பு சட்டை அணிந்து, கருப்புக்கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டார். அவருடன் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோர் கலந்துகொண்டு கோஷங்களை எழுப்பி, கருப்புக்கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பேசிய அண்ணாமலை, “தமிழகம் முழுவதும் பாஜ தொண்டர்கள் இன்று (நேற்று) கருப்புக்கொடி போராட்டம் நடத்தினர். தமிழகத்திற்கு அண்டை மாநிலங்களுடன் பல பிரச்னைகள் உள்ளன. திருவனந்தபுரத்தில் இருந்து வரும் கழிவுகள் தமிழகத்தில் கொட்டப்படுகின்றன. கர்நாடகத்தில் நீண்ட நாட்களாக மேகதாது அணை கட்டும் பிரச்னை உள்ளது. தற்போதைய அரசின் நடவடிக்கைகள் நாடகம் மட்டுமே. தொகுதி மறுசீரமைப்பின் அடிப்படையில் தமிழக தொகுதி 7.17 சதவீதம் குறைய போவதில்லை’’ என்றார். இதேபோல பாஜ முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் உள்ள தனது வீட்டின் முன்பாக கருப்பு கொடி போராட்டத்தில் ஈடுபட்டார்.

The post பாஜ தலைவர் அண்ணாமலை கருப்புக்கொடி போராட்டம் appeared first on Dinakaran.

Tags : BJP ,Annamalai ,flag ,Chennai ,president ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED மார்க்சிஸ்ட் தலைவர்கள் முதல்வருடன்...