×

பிரிட்டன் நாடாளுமன்றத்தில் கவுரவம் நடிகர் சிரஞ்சீவிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

புதுடெல்லி: தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் சிரஞ்சீவி இதுவரை 156 படங்களில் நடித்து இருக்கிறார். இந்திய சினிமா வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான செல்வாக்கு மிக்க நடிகர்களில் ஒருவராக விளங்குகிறார். கலைத்துறையில் அவரது சேவையை பாராட்டி ஒன்றிய அரசு பத்ம விபூஷண் விருது வழங்கி கவுரவித்தது. இந்தநிலையில், கலைத்துறை மற்றும் சமுதாயத்திற்கு சிறப்பாக பங்காற்றியதற்காக, பிரிட்டன் நாடாளுமன்றத்தில் சிரஞ்சீவிக்கு பாராட்டு விழா நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. நேற்றுமுன்தினம் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நடந்த விழாவில் சிரஞ்சீவிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இதில் பிரிட்டன் அமைச்சர்கள், எம்பிக்கள் கலந்துகொண்டனர்.

The post பிரிட்டன் நாடாளுமன்றத்தில் கவுரவம் நடிகர் சிரஞ்சீவிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது appeared first on Dinakaran.

Tags : British Parliament ,Chiranjeevi ,New Delhi ,Union Government ,
× RELATED பெங்களூரு ரவுடி கொலை வழக்கில் பாஜ எம்எல்ஏ 5வது குற்றவாளி