வாலாஜா: ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த அம்மணந்தாங்கல் கிராமத்தில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே சிவகோபால் (56) என்பவருக்கு சொந்தமான பஞ்சு கழிவு துணி குடோன் உள்ளது. இங்கிருந்து பஞ்சு கழிவு துணிகளை ஆட்டோ மொபைல் தொழிற்சாலைக்கு மொத்தமாக அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த குடோனில் நள்ளிரவு 12 மணியளவில் திடீரென தீப்பிடித்துள்ளது. தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.
இதைபார்த்த அப்பகுதி மக்கள், ராணிப்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், 3 தீயணைப்பு வாகனங்கள் மூலம் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுட்டனர். சுமார் 2 மணி நேரம் போராடி தீயை முழுவதுமாக அணைத்தனர். இதில் குடோனில் இருப்பு வைத்திருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பஞ்சு கழிவு துணிகள் முழுவதும் தீயில் கருகின. இதுகுறித்து வாலாஜா போலீசார் வழக்கு பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post வாலாஜா அருகே நள்ளிரவு பஞ்சு குடோனில் பயங்கர தீ: பல லட்சம் பொருட்கள் சேதம் appeared first on Dinakaran.
