×

மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை முயற்சியை கைவிட வேண்டும்: விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி தீர்மானம்

சென்னை: தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சியின் மாநிலச் செயற்குழுக் கூட்டம் வடபழனியில் பொதுச் செயலாளர்கள் சுந்தரராஜ் ஜெகதீசன், ஜெகமுருகன், சுப்பராயலு ஆகியோர் முன்னிலையில் அக்கட்சி தலைவர் பொன்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் மொத்தம் 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்ய முயற்சிக்கும் ஒன்றிய அரசின் செயலால் தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களின் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை குறைவதற்கான பேராபத்து உள்ளது. எனவே இப்போது உள்ள தொகுதிகள் அப்படியே நீடிப்பதற்கான சட்டத் திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும்.உள்ளிட்ட 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

The post மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை முயற்சியை கைவிட வேண்டும்: விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி தீர்மானம் appeared first on Dinakaran.

Tags : Party ,Chennai ,Tamil Nadu Farmers and ,Vadapalani ,Sundararaj Jagatheesan ,Jagamurugan ,Subbarayalu ,Ponkumar ,Workers Party ,Dinakaran ,
× RELATED வெனிசுலா மீது அமெரிக்கா தாக்குதல்: கட்சி தலைவர்கள் கண்டனம்