×

பாசன நீர் திறப்பிற்கு ஏதுவாக சிறப்பு தூர்வாரும் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும்: பொறியாளர்களுக்கு அமைச்சர் துரைமுருகன் அறிவுறுத்தல்

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நீர்வளத்துறையின் பொறியாளர்களுடன் ஆய்வு கூட்டம் நடைப்பெற்றது. ஆய்வுக் கூட்டத்தில், அரசால் அறிவிக்கப்பட்ட திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து மண்டல வாரியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நீர்வளத்துறையின் முன்னோடியான திட்டங்கள் குறித்த முன்னேற்றம், நடைபெற்று வரும் முக்கிய திட்டப் பணிகள் குறித்த முன்னேற்றம், அணை புனரமைப்பு திட்டத்தின் முன்னேற்ற விவரங்கள் மற்றும் வெள்ளத் தணிப்புப் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது: அனைத்து அறிவிப்பு பணிகளையும் விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். மேலும் சிறப்பு தூர் வாரும் பணிகளை பாசன நீர் திறப்பிற்கு ஏதுவாக விரைந்து முடிக்கப்பட வேண்டும். இந்த நிதியாண்டின் பணிகள் அனைத்தையும் முழுமையாக முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சர் துரைமுருகன் அறிவுறுத்தினார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் நீர்வளத்துறையின் செயலாளர் மங்கத் ராம் சர்மா, நீர்வளத்துறையின் முதன்மை தலைமைப் பொறியாளர் மற்றும் தலைமைப் பொறியாளர் (பொது) மன்மதன், சிறப்பு செயலாளர் தரன், அனைத்து மண்டல தலைமைப் பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.

The post பாசன நீர் திறப்பிற்கு ஏதுவாக சிறப்பு தூர்வாரும் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும்: பொறியாளர்களுக்கு அமைச்சர் துரைமுருகன் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Minister Duraimurugan ,Chennai ,Water Resources Department ,Water Resources ,Minister ,Duraimurugan ,Chennai Secretariat ,Dinakaran ,
× RELATED சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 42...