×

குமரகுரு கல்வி நிறுவனத்தில் ‘யுகம்’ கலாச்சார விழா நிறைவு

கோவை, மார்ச் 13: குமரகுரு கல்வி நிறுவனம் சார்பில் 3 நாட்களாக நடந்த யுகம் என்ற தொழில்நுட்ப கலாச்சார விழா முடிவடைந்தது. இந்த விழாவில் 200 கல்லூரிகளிலிருந்து 12 ஆயிரம் பேர் பங்கேற்றனர். 150 நிகழ்வுகள், 45 பயிற்சி முகாம்கள் மற்றும் 5 மாநாடுகள் நடத்தப்பட்டன.

கும்பா என்ற முதல் மாஸ்காட் அறிமுகத்துடன் விழா தொடங்கியது. அறிவு, ஞானம், வலிமை மற்றும் உறுதிப்பாடு ஆகியவற்றை குறிக்கும் கும்பா விழாவிற்கு ஒரு புதிய பரிமாணத்தை சேர்த்தது. ஜெகதீஷ் பாகன் ஐஎப்எஸ், சங்கீதா சிந்தி பால் மற்றும் ஸ்டான்லி ஜோனி போன்ற சிந்தனையாளர்கள் பங்கேற்றனர். ஏ.ஐ மாநாடு, சைபர் பாதுகாப்பு, டிஜிட்டல் புதுமை போன்ற தலைப்புகள் ஆராயப்பட்டன. நிகழ்வில் 16 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தங்கள் ஆலோசனையை பகிர்ந்து கொண்டனர். இதனை தொடர்ந்து கார்த்திக், சக்தி ஸ்ரீ கோபாலன் மற்றும் சன்பர்ன் கேம்பஸ் இன் நிகழ்ச்சிகளுடன் விழா முடிவடைந்தது.

The post குமரகுரு கல்வி நிறுவனத்தில் ‘யுகம்’ கலாச்சார விழா நிறைவு appeared first on Dinakaran.

Tags : Yugam' cultural festival ,Kumaraguru Educational Institute ,Coimbatore ,Yugam ,Yugam' ,
× RELATED மகா சிவராத்திரியை முன்னிட்டு பாடல்...