×

பெரிய கொடிவேரி பேரூராட்சியில் ரூ.14.50 கோடியில் வளர்ச்சி பணிகள்

 

கோபி, மார்ச் 13: கோபி அருகே உள்ள பெரிய கொடிவேரி பேரூராட்சியில் கடந்த 4 ஆண்டுகளில் 14.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வளர்ச்சி பணிகள் நடைபெற்று உள்ளது. கோபி அருகே உள்ள பெரிய கொடிவேரி பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்குள்ளவர்களில் பெரும்பாலும் கூலி வேலையும், கைத்தறி நெசவு தொழிலும் செய்தும் வருகின்றனர். இந்த பேரூராட்சியில் பெரும்பாலும் தொழில் வளர்ச்சி எதுவும் இல்லாத நிலையில் கடந்த 25 ஆண்டுகளாக எவ்வித வளர்ச்சி பணிகளும் நடைபெறாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவை சேர்ந்த தமிழ்மகன் சிவா வெற்றி பெற்று பேரூராட்சி தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

Tags : Periya Kodiveri Panchayat ,Gopi ,Gopi… ,
× RELATED சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு துணை...