×

நல வாரியத்தில் வழங்கப்படும் ஓய்வூதியம் ரூ.3000 என உயர்த்தி வழங்க வேண்டும்: கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு

 

பெரம்பலூர், மார்ச் 12: தொழிற்சங்க பாதுகாப்பு கூட்டமைப்பு (கட்டுமானம் மற்றும் அமைப்புச்சாரா தொழிலாளர்கள்) சார்பில் கட்டுமானம் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்குக்கென்று தனித்துறையை உருவாக்கி, சட்டப்படி பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கன்னியாக் குமரி முதல் சென்னை கோட்டை வரை உரிமை மீட்பு புரட்சி பயணக் குழுவினர் தங்களது கோரிக்கை மனுவினை பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலகத்தில் வழங்கி சென்றனர்.

தொழிற்சங்க பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில், கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர்களுக்குகென்று தனித்துறையை உருவாக்கி சட்டப்படி பாது காக்க வேண்டும்.நல வாரியத்தில் வழங்கப்படும் ஓய்வூதியம் ரூ.3000 ஆக உயர்த்தி வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, உரிமை மீட்பு புரட்சி பயணம் என்ற தலைப்பில் கடந்த 3ம் தேதி கன்னியாக்குமரியில் இருந்து கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் சேலம் கதிர்வேல் தலைமையில் 4 நபர்களுடன் புறப்பட்டு,

வருகி ன்ற வழியில் அனைத்து மாவட்ட ங்களிலும் அந்தந்த மாவட்டகலெ க்டர் அலுவலகங்களில் கோரிக்கை மனுவை கொடுத்து விட்டு, 28ம் தேதி சென்னை தலைமைச் செய லகத்தில் தொழிலாளர் நலத்துறை செயலாளரிடம் தங்களது கோரி க்கை மனுவை அளிக்க உள்ளனர். அதன் ஒரு பகுதியாக நேற்று பகல் 12 மணிக்கு பெரம்பலூர் மாவ ட்டக கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டரின் நேர்முகஉத வியாளர் (பொது) வைத்தியநாதனிடம், தங்களது கோரிக்கை மனுவை கொடுத்துவிட்டு அரியலூர் மாவட்டத்திற்கு புறப்பட்டு சென்றனர்.

The post நல வாரியத்தில் வழங்கப்படும் ஓய்வூதியம் ரூ.3000 என உயர்த்தி வழங்க வேண்டும்: கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு appeared first on Dinakaran.

Tags : Welfare Board ,Perambalur ,Trade Union Protection Federation ,Construction and Unorganized Workers ,Kanyakumari ,Chennai Fort ,Dinakaran ,
× RELATED அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில்...