பெரம்பலூர்,மார்ச் 16: கீழக்கணவாய் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாதவிடாய் சுகாதார மேலாண்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டம், கீழக்கணவாய் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாதவிடாய் சுகாதார மேலாண்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்ககத்தின் மூலம் நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் பாலசுப்பரமணியன் தலைமை வகித்தார். கணித விரிவுரையாளர் கவிதா வரவேற்றார்.
நிகழ்ச்சியில் பெரம்பலூர் மாவட்ட மகளிர் திட்டத்தின் வட்டார ஒருங்கிணைப்பாளர் பரமேஸ்வரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாணவிகளுக்கு மாதவிடாய் கால சுகாதார பராமரிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதனைத் தொடர்ந்து கல்லூரியின் மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறை தலைவர் சுசீலா சிறப்புரை பேசினார். நிகழ்ச்சியில் மாணவிகளுக்கு கவிதைப் போட்டி, கட்டுரைப் போட்டி, நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இறுதியில் மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறையைச் சேர்ந்த வினோதினி நன்றி தெரிவித்தார்.
