×

கொளக்காநத்தத்தில் காஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்

பாடாலூர், மார்ச் 15: நாடு முழுவதும் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்காத ஒன்றிய அரசை கண்டித்து முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பில் நேற்று காலை மாநிலம் முழுவதும் நகரம், ஒன்றியம், பேரூர் அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்படி பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா கொளக்காநத்தம் பஸ் நிலையம் அருகில் ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் என்.கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். இது தொடர்பாக ஒன்றிய செயலாளர் என்.கிருஷ்ணமூர்த்தி பேசுகையில், சரியான திட்டமிடல் இல்லாததால், காஸ் சிலிண்டருக்கு மக்களை ஒன்றிய அரசு தவிக்க விட்டு விட்டது. மேலும் தமிழகத்துக்கு உரிய திட்டங்களையும் தரவில்லை என்று அவர் பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் அனைத்து அணிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள், மூத்த முன்னோடிகள் திரளாக கலந்து கொண்டனர்.

 

 

Tags : DMK ,Kolakanatam ,Badalur ,Union government ,Chief Minister ,president ,M.K. Stalin ,
× RELATED ஜெயங்கொண்டம் அரசு கல்லூரியில் கபடி ஆடுகளம் திறப்பு விழா