×

அரியானாவில் விழுந்து நொறுங்கிய விமானப்படை விமானம்

சண்டிகர்: இந்திய விமானப்படையின் ஜாகுவார் விமானம் அரியானாவில் விழுந்து நொறுங்கியது. அரியானாவின் பஞ்ச்குலா மாவட்டத்தில் இந்திய விமானப்படைக்கு ெசாந்தமான ஜாக்குவார் விமானம் மோர்னி மலைப்பகுதியில் திடீரென விழுந்து நொறுங்கியது. இந்த பகுதி ராய்புரானி என்ற இடத்தில் உள்ளது. இந்த விமானப்படை விமானம் வழக்கமான பயிற்சிக்காக அம்பாலா தளத்தில் இருந்து புறப்பட்டது. அப்போது திடீரென செயல் இழந்ததால் விழுந்து நொறுங்கியது. இதில் பயணம் செய்த விமானி பாதுகாப்பாக தப்பினார்.

The post அரியானாவில் விழுந்து நொறுங்கிய விமானப்படை விமானம் appeared first on Dinakaran.

Tags : Haryana ,Chandigarh ,Indian Air Force ,Jaguar ,Morni hills ,Panchkula district ,Raipurani ,Dinakaran ,
× RELATED விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்பட...