×

சுங்கச்சாவடி வசூல் மையம் – விசாரணை ஒத்திவைத்தது ஐகோர்ட் கிளை

மதுரை: ராமேஸ்வரம் – தனுஷ்கோடி நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடி வசூல் மையத்தை அகற்ற உத்தரவிடக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. சுங்கச்சாவடி வசூல் மையத்தை அகற்றக் கோரி ராமநாதபுரத்தை சேர்ந்த தமிழ்வேந்தன் என்பவர் ஐகோர்ட் கிளையில் மனுத்தாக்கல் செய்தார். அரசின் உரிய அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக சுங்கச் சாவடியில் வசூல் செய்யப்படுவதாக மனுதாரர் புகார் தெரிவித்தார். மனுதாரர் தரப்பில் மேலும் அவகாசம் கோரப்பட்டதால் வழக்கு விசாரணையை ஐகோர்ட் கிளை ஒத்திவைத்து உத்தரவிட்டது.

The post சுங்கச்சாவடி வசூல் மையம் – விசாரணை ஒத்திவைத்தது ஐகோர்ட் கிளை appeared first on Dinakaran.

Tags : Toll booth collection center ,High Court ,Madurai ,Rameswaram ,Dhanushkodi highway ,Tamilvendan ,Ramanathapuram ,Dinakaran ,
× RELATED சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 42...