சென்னை: கொலை, கொள்ளை, திருட்டு உள்ளிட்ட குற்றங்களுக்கு எதிராக எடுத்த சிறப்பான நடவடிக்கையால் கடந்த ஆண்டை காட்டிலும் தமிழ்நாட்டில் குற்றங்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளதாக டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: சொத்துக்கு எதிரான குற்றங்கள்: 2023ம் ஆண்டில் பதிவான ஆதாயக்கொலை வழக்குகளின் எண்ணிக்கை 83 ஆக இருந்தது, அதேசமயம் 2024ம் ஆண்டில் இது 75 வழக்குகளாக குறைக்கப்பட்டது. இதனால், 2023 உடன் ஒப்பிடும்போது 2024ம் ஆண்டில் 8 வழக்குகள் (10%) குறைந்துள்ளன.
சொத்து தொடர்பான குற்றங்கள்:தமிழ்நாட்டில் சொத்து தொடர்பான குற்றங்கள் குறிப்பாக ஆதாயக்கொலை, கொள்ளை மற்றும் திருட்டு போன்ற கடுமையான குற்றங்கள் 2024ம் ஆண்டில் குறைந்துள்ளன. இதற்கு காவல்துறை மேற்கொண்ட பல்வேறு தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாகும். சட்டம் ஒழுங்கு பராமரிப்பு: 2023 ம் ஆண்டில் உடலுக்கு எதிரான குற்றங்களில் (கொலை, கொலை முயற்சி, கொலை கொலையாத மரணம், காயம் மற்றும் கொங்காயம்) 49,286 வழக்குகள் பதிவாகியுள்ளன.
அதே நேரத்தில் 2024 ஆம் ஆண்டில் இது 31,497 ஆகும். இதனால் 2023 உடன் ஒப்பிடும்போது 2024 ம் ஆண்டில் 17,789 வழக்குகள் (36.12%) குறைந்துள்ளன. குறிப்பாக, 2023 உடன் ஒப்பிடும்போது 2024 இல் கொலைகள் 110 வழக்குகள் (6.8% குறைப்பு). குறைந்துள்ளன. 2023 ம் ஆண்டில் பதிவான கலவர வழக்குகளின் எண்ணிக்கை 1305 ஆகவும், 2024 ம் ஆண்டில் 1229 வழக்குகளாகவும் உள்ளது. இதனால், 2023 உடன் ஒப்பிடும்போது 2024 ல் 76 வழக்குகள் (5.8%) குறைந்துள்ளன.
* விசாரணை முடிவுறும் நிலையில் உள்ள வழக்குகளில் மற்றும் தண்டனை பெற வாய்ப்புள்ள வழக்குகளாக, கடந்த 2023-ம் ஆண்டில் 48 வழக்குகளும், 2024-ம் ஆண்டில் 391 வழக்குகளும் கண்டறியப்பட்டன. இந்த வழக்குகள் மூத்த அதிகாரிகளால் தண்டனை பெறுவதற்காக விசாரணையை விரைவுபடுத்த கண்காணிக்கப்படுகிறது.
* கடந்த 2023-ம் ஆண்டில் 110 கொலை வழக்குகளும் 2024-ம் ஆண்டில் 63 வழக்குகளும் பதிவாகின, இது 2023-ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2024-ம் ஆண்டில் 47 வழக்குகள் (42.72 %) குறைந்துள்ளன.
* தடுப்புக்காவல் – குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் 2023 ஆம் ஆண்டில் 3,694 சமூக விரோதிகளும், 2024ம் ஆண்டில் 4,572 சமூக விரோதிகளும் தடுப்புக் காவலின் கீழ் கைது செய்யப்பட்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post கொலை, கொள்ளைக்கு எதிராக எடுத்த சிறப்பான நடவடிக்கைகளால் தமிழ்நாட்டில் குற்றங்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது: டிஜிபி சங்கர் ஜிவால் தகவல் appeared first on Dinakaran.
