- சித்தரந்தாங்கரை சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
- திருவிடைமருதூர்
- மகா கும்பாபிஷேகம்
- 48 மணலூர் சித்தரந்தாங்கரை சித்தி விநாயகர் கோவில்
- Kumbabhishekam
- திருவாவடுதுறை ஆதீனம் 24ம் தேதி குருமஹாசன்னிதானம்
- அம்பலவாணர்
- தேசிகா
- பரமாச்சார்யா
- சுவாமிகள்
- யாக பூஜை
திருவிடைமருதூர், மார்ச்6: திருவிடைமருதூர் அருகே 48 மணலூர் சிற்றாற்றங்கரை சித்தி விநாயகர் கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் திருவாவடுதுறை ஆதீனம் 24வது குருமகாசந்நிதானம் ல அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் யாகபூஜையை தொடக்கி வைத்தார். தொடர்ந்து இரண்டு கால யாக பூஜைகள் நடைபெற்று, சிவராமபுரம் பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில் வாயு சித்த ராமானுஜர் ஜீயர் சுவாமிகள், கோவிந்தபுரம் விட்டல் ருக்மிணி சமஸ்தான் ஸ்தாபகர் பிரம்ம விட்டல்தாஸ் மகராஜ், திருவாவடுதுறை ஆதீனம் கட்டளை மத் வேலப்ப தம்பிரான் சுவாமிகள் ஆகியோர் முன்னிலையில் மங்கள வாத்தியங்கள் முழங்க, வானவேடிக்கையுடன் கடம் புறப்பாடும், தொடர்ந்து கோயில் விமானத்திற்கு புனித நீரூற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் மூலவர் சித்தி விநாயகருக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.
இதில் ஆடுதுறை பேரூராட்சி தலைவர் ம.க.ஸ்டாலின், திருப்பனந்தாள் ஒன்றியக்குழு முன்னாள் துணைத்தலைவர் அண்ணாதுரை, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் மணலூர் சுமதி குமார், நரசிங்கன்பேட்டை மாலதி சதீஷ்ராஜ், குறிச்சி குணசேகரன், தமிழ் சேவா சங்கம் நிர்வாகிகள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர். ஏற்பாடுகளை மணலூர், குமணந்துறை கிராமவாசிகள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.
The post திருவிடைமருதூர் அருகே சிற்றாற்றங்கரை சித்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் appeared first on Dinakaran.
