- கலாச்சார கருத்தரங்கு
- கொடைக்கானல் பல்கலைக்கழகம்
- கொடைக்கானல்
- காந்திய சிந்தனை மையம்
- கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்
- காமன்வெல்த் மையம்
- ஜெர்மன் லிப்ஸ்காம்ப் பல்கலைக்கழகம்
- முத்து மீனலோசனி
- கருத்தரங்கு
- தின மலர்
கொடைக்கானல், மார்ச் 5: கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தின் காந்திய சிந்தனை மையம், காமன் வெல்த் மையம், ஜெர்மனி லிப் சிப் பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து சர்வதேச கலாசார கருத்தரங்கினை 2 நாட்கள் நடத்தியது. பேராசிரியர் முத்து மீனலோசனி வரவேற்றார். தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கிளாரா தேன்மொழி துவக்க உரையாற்றினார். ஜெர்மனி லிப்சிப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ப்ரூனி லாண்டர் முன்னிலை வகித்து ஜெர்மனி நாட்டின் கலாசாரம் பற்றி பேசினார்.
தொடர்ந்து ஆங்கிலத்துறை பேராசிரியர் விஜயா இந்திய கலாசசாரம் பற்றியும், அதன் முக்கியத்துவம் பற்றியும் பேசினார். பின்னர் ஜெர்மன் பல்கலைக்கழக பேராசிரியர்கள் உலகப்போர் பற்றி பேசினர். தொடர்ந்து பல்கலை மாணவிகளிடம் இந்தியா மற்றும் தமிழ்நாட்டு கலாச்சாரங்கள் பற்றி கேட்டு அறிந்து கொண்டனர். பின்னர் தமிழ்நாட்டின் கலைகளான ஒயிலாட்டம், கரகாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட கலாசார கலை நிகழ்ச்சிகள் நடந்தது. காந்திய சிந்தனை மைய பேராசிரியர் பரிமளா தேவி நன்றி கூறினார்.
The post கொடைக்கானல் பல்கலை.யில் கலாசார கருத்தரங்கு appeared first on Dinakaran.
