×

அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தில் காட்டுத் தீ: 4,000 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை

கரோலினா மாகாணம்: அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட காட்டுத்தீ, அருகில் உள்ள பகுதிகளுக்கும் பரவ தொடங்கியுள்ளது. வட கரோலினா, அமெரிக்கா முழுவதும் பல காட்டுத்தீகள் எரிவதாக அமெரிக்க வனத்துறை தெரிவித்துள்ளது. நான்கு வெவ்வேறு காடுகளில் 400 ஏக்கருக்கும் (161.87 ஹெக்டேர்) அதிகமான நிலப்பரப்பை எரித்துள்ள தீயை அணைக்க குழுக்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.

சார்லோட்டிலிருந்து கிழக்கே கிட்டத்தட்ட 50 மைல் (80.47 கிலோமீட்டர்) தொலைவில் உள்ள உவாரி தேசிய வனப்பகுதியில் பதிவான மிகப்பெரிய தீ, சுமார் 300 ஏக்கர் (121.41 ஹெக்டேர்) எரிந்துள்ளது. இந்த நிலையில், அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட காட்டுத்தீ, அருகில் உள்ள பகுதிகளுக்கும் பரவ தொடங்கியுள்ளது.

* தீயை அணைக்கும் பணியில் 500க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

* இதில் சுமார் 4,000 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரையானது

*பாதுகாப்பு கருதி 2,000த்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிப்பிடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

The post அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தில் காட்டுத் தீ: 4,000 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை appeared first on Dinakaran.

Tags : US ,North Carolina ,Province of Carolina ,United States ,US Forest Department ,Dinakaran ,
× RELATED 2025ம் ஆண்டில் 1 லட்சம் விசாக்களை ரத்துசெய்தது அமெரிக்க அரசு..!!