×

அரசு பள்ளி ஆண்டு விழா

போச்சம்பள்ளி, மார்ச் 4: மத்தூர் ஒன்றியம், எம்.ஒட்டப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளியின்(பொ) தலைமை ஆசிரியர் வேடிப்பன் தலைமை தாங்கினார். உதவித் தலைமை ஆசிரியர் செந்தில்குமார் வரவேற்றார், முன்னாள் கல்வி அலுவலர் சரவணன், சிறப்பு விருந்தனராக பங்கேற்று பேசினார். விழாவில் மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் சரவணன், கலைச்செல்வன், கோமதி, கலைவாணன், முருகம்மாள் மற்றும் பெற்றோர்கள், கிராம மக்கள் கலந்து கொண்டனர். பட்டதாரி ஆசிரியர் செந்தில்குமார் நன்றி கூறினார்.

The post அரசு பள்ளி ஆண்டு விழா appeared first on Dinakaran.

Tags : Government School Annual Day ,Pochampally ,M. Ottapatti Government High School ,Mathur Union ,Headmaster ,Vedippan ,Assistant ,Senthilkumar ,Education ,Saravanan ,Dinakaran ,
× RELATED ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை