×

மஞ்சள் அறுவடைக்கு முன்பதிவு

போச்சம்பள்ளி, ஜன.9: பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், போச்சம்பள்ளி சுற்றுவட்டார பகுதியில், தற்போதே மஞ்சளை முன்பதிவு செய்யும் பணியில் வியாபாரிகள் ஈடுபட்டுள்ளனர். தமிழர் திருநாளாம் பொங்கல் பணடிகை, வரும் 15ம்தேதி கொண்டாடப்படுகிறது. உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், உழவுத்தொழிலுக்கும் உறுதுணையாக இருக்கும் கால்நடைகளுக்கும் நன்றி செலுத்தும் விழாவாக கொண்டாடப்படும். இந்த பொங்கல் விழாவில் கரும்பு, செடியுடன் கூடிய பச்சை மஞ்சள் கொத்து போன்றவை முக்கிய இடம் பெற்றுள்ளது. பொங்கல் பானையை அலங்கரிக்கவும், பூஜையில் வைத்து வழிபடவும், மஞ்சள் கொத்து பயன்படுத்தப்படுகிறது.

இதற்காக போச்சம்பள்ளி, மத்தூர், அகரம், ஓலப்பட்டி, சாமல்பட்டி, கல்லாவி, ஆனந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் மஞ்சள் சாகுபடி செய்துள்ளனர். பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தற்போதே விவசாயிகளிடம் திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி மாவட்டம் மற்றும் உள்ளூர் வியாபாரிகள் முன்பதிவு செய்து வருகிறார்கள். தேவை அதிகரித்துள்ளதால், கடந்தாண்டை காட்டிலும், இந்தாண்டு மஞ்சள் விலை உயரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : Bochampalli ,Pongal festival ,Pongal Pandiga ,
× RELATED பஸ் மீது வெடி வீசிய வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது