×

பஸ் மீது வெடி வீசிய வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது

கிருஷ்ணகிரி, ஜன.9: கிருஷ்ணகிரி அருகே தனியார் நிறுவன பஸ் மீது வெடி வீசிய வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில் இருந்து கிருஷ்ணகிரி செல்லும் சாலையில் கடந்த 12ம் தேதி இரவு தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான பஸ் ஊழியர்களை ஏற்றிக்கொண்டு வந்தது. அந்த பஸ் பாலகுறி அருகே உள்ள பண்டிகாரன்கொட்டாய் அருகே வந்தபோது, மறைந்திருந்த சிலர் பயங்கர சத்தத்துடன் வெடிக்க கூடிய பன்றி வெடியை பஸ் மீது வீசினர். இந்த வெடி விபத்தில் பஸ்சின் கண்ணாடி, பக்கவாட்டு பகுதி சேதமடைந்தது. மேலும் பஸ்சில் இருந்த தனியார் நிறுவன ஊழியரான ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மதுசாதரணி என்ற பெண்ணுக்கு காயம் ஏற்பட்டது.

இதுதொடர்பாக பஸ் டிரைவர் சங்கர் கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் பன்றி வெடியை வீசியது மேல்கொட்டாய் கிராமத்தை சேர்ந்த சக்திவேல்(26), எண்ணேகொள்புதூரை சேர்ந்த சேகர்(20) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் அவர்களை குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்க தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன், கிருஷ்ணகிரி டிஎஸ்பி முரளி, மாவட்ட எஸ்பி. தங்கதுரைக்கு பரிந்துரை செய்தார். இதை தொடர்ந்து எஸ்பி பரிந்துரையை ஏற்று, சக்திவேல், சேகர் ஆகிய 2 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் உத்தரவிட்டார். இதையடுத்து, அதற்கான நகல் சிறையில் உள்ள இருவரிடமும் வழங்கப்பட்டது.

Tags : Goondas ,Krishnagiri ,Rayakottai ,Krishnagiri district ,
× RELATED மஞ்சள் அறுவடைக்கு முன்பதிவு