×

டூவீலர் மீது கார் மோதிய விபத்தில் தொழிலாளி பலி

கிருஷ்ணகிரி, ஜன.9: சூளகிரி அருகேயுள்ள சாமல்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன்(22), கூலித்தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் (24). நண்பர்களான இவர்கள் இருவரும், கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியளவில் சாமல்பள்ளம் – கும்மனூர் ரோட்டில் தின்னூர் பகுதியில் டூவீலரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, எதிரே வந்த கார், டூவீலர் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த இருவரையும், அங்கிருந்தவர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி வெங்கடேசன் உயிரிழந்தார். தொடர்ந்து சந்தோஷ் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Krishnagiri ,Venkatesan ,Chamalpallam ,Choolagiri ,Santosh ,Chamalpallam-Kummanur road ,Thinnoor ,
× RELATED மஞ்சள் அறுவடைக்கு முன்பதிவு