×

கேரளாவில் 3 நாள் மழை பெய்யும் 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

திருவனந்தபுரம்: கேரளாவில் கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பே கடந்த சில வாரங்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது. சராசரியாக 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரித்து உள்ளது. இந்தநிலையில் இன்று (28ம் தேதி) முதல் அடுத்த 3 நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

28, மார்ச் 1 ஆகிய தேதிகளில் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்பதால் இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. மார்ச் 2ம் தேதி கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. மழை பெய்யும் என்றாலும் கேரளா முழுவதும் வெப்பநிலை சற்று உயர்ந்தே காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

The post கேரளாவில் 3 நாள் மழை பெய்யும் 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Thiruvananthapuram ,Kerala ,
× RELATED ககன்யான் திட்டத்தில் அடுத்த...