×

போதைக்கு எதிரான விழிப்புணர்வு இறகுப்பந்து போட்டி

 

ஊட்டி, பிப். 24:போதையில்லா தமிழ்நாடு என்ற இலக்கை எட்டும் நோக்கில் தமிழக அரசால் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பல்வேறு அமைப்புகள் சார்பிலும் போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக கோவை மண்டல சிஎஸ்ஐ மற்றும் நீலகிரி சிஎஸ்ஐ ஹோலி டிரினிட்டி பாஸ்டர்ஸ் சார்பில் நீலகிரி மாவட்டம் முழுவதிலும் இருந்து சுமார் 50 அணிகள் பங்கேற்ற போதைக்கு எதிரான விழிப்புணர்வு இரட்டையர் இறகுப்பந்து போட்டிகள் ஊட்டி அண்ணா உள் விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது. இப்போட்டிகளை சிஎஸ்ஐ கோவை திருமண்டல பேராயர் திமோத்தி ரவீந்திரன் தலைமை வகித்து துவக்கி வைத்தார். சார்லஸ் சாம்சன் மெமோரியல் கோப்பைக்கான போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றது.

The post போதைக்கு எதிரான விழிப்புணர்வு இறகுப்பந்து போட்டி appeared first on Dinakaran.

Tags : Ooty ,Tamil Nadu government ,Tamil Nadu ,Coimbatore Zone CSI ,Dinakaran ,
× RELATED ரயிலில் டிக்கெட் பரிசோதகருக்கு அடி உதை