×

இலவச கண் சிகிச்சை முகாம்

 

கோவை, பிப். 24: கோவை மாவட்டம் பார்வை இழப்புத் தடுப்புச் சங்கம், அனைத்து சமூக மக்களுக்கும் உதவும் பேரவை மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாமை ஆர்எஸ் புரம் லாலிரோடு சிக்னல் அருகில் பிஷப் உபகாரம் உயர்நிலைப்பள்ளியில் நடத்தியது. முகாமில், கண்புரை நோய், நீர் அழுத்த நோய், மாலைக்கண் நோய், மாறுக்கண், சீழ் நீர் வடிதல், தூரப்பார்வை ஆகியவற்றிற்கான பரிசோதனைகள் இலவசமாக செய்யப்பட்டது.

21 வது வருடமாக நடத்தப்பட்ட இந்த முகாமில் 2 டாக்டர்கள், 11 நர்சுகள் அடங்கிய குழுவினர் பரிசோதனை மேற்கொண்டனர். இதில் 93 பேர் சிசிச்சை பெற்றனர். 15 பேர் இலவச அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். முகாமில் குறைந்த விலையில் தரமான கண்ணாடி வழங்கப்பட்டது. முகாமானது வக்கீல் புஷ்பானந்தம் தலைமையில் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை வக்கீல் புஷ்பானந்தம் மற்றும் வக்கீல் குமாஸ்தாக்கள் திவ்யா, லட்சுமி, செல்வராஜ், ஜெபா, மோகன் ராஜ் ஆகியோர் செய்து இருந்தனர். முகாமில் சிவாஜி காலனி குடியிருப்போர் சங்க தலைவர் நடராஜ், வார்டு கவுன்சிலர் சந்தோஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post இலவச கண் சிகிச்சை முகாம் appeared first on Dinakaran.

Tags : Eye ,Treatment ,Camp ,Coimbatore ,Coimbatore District Sight Loss Prevention Association ,All Community People's Council ,Aravind Eye Hospital ,Bishop's Road ,RS Puram Lali Road ,Eye Treatment ,Dinakaran ,
× RELATED சூலூரில் மாணவியிடம் பேசியதால்...