×

மணமேல்குடி அருகே வெள்ளூர் அரசு பள்ளியில் தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

 

அறந்தாங்கி,பிப்.19: மணமேல்குடி அருகே வெள்ளூர் அரசு பள்ளியில் தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே வெள்ளூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியர் சீனிவாசன் தலைமை வகித்தார். பெருமருதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார சுகாதார மேற்பார்வையாளர் அண்ணாதுரை மற்றும் தொழுநோய் ஒழிப்பு மேற்பார்வையாளர் ராமநாதன், சுகாதார ஆய்வாளர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமில் டெங்கு கொசு பரவாமல் தடுப்பது எப்படி தொழுநோய் குறித்த பயம் வேண்டாம். அது முற்றிலும் சிகிச்சை அளிக்க கூடியது. நோய்கள் வரும் முன் காப்பது மிக முக்கியம். அயோடின் கலந்த உப்பை தினசரி உணவில் பயன்படுத்த வேண்டும். குடிநீரை காய்ச்சி வடிகட்டி குடிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்டன. முகாமில் ஆசிரியர்கள் சுவாமிநாதன் மகாலட்சுமி சத்தியபிரியா அருள்ஜோதி மற்றும் அம்பிகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

The post மணமேல்குடி அருகே வெள்ளூர் அரசு பள்ளியில் தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Vellore Government School ,Manamelkudi ,Aranthangi ,Vellore Panchayat Union Middle School ,Pudukkottai ,headmaster ,Srinivasan ,
× RELATED 9 சட்டமன்ற தொகுதியிலும் 20, 21ம் தேதிகளில்...