- கும்பமேளா
- ஜெய்ப்பூர்
- கும்பமேலா நிகழ்ச்சி
- பிரயாக்ராஜ், உத்தரப் பிரதேசம்
- இதற்கிடையில் ராஜஸ்தான் மாநிலம்
- டொங் மாவட்டம்
ஜெய்ப்பூர்: கும்பமேளாவில் பங்கேற்றுவிட்டு திரும்பியபோது கார் விபத்துக்குள்ளான சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் கும்பமேளா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் உலகம் முழுவதிலும் இருந்து கோடிக்கணக்கானோர் கலந்து கொண்டுள்ளனர். இதனிடையே, ராஜஸ்தான் மாநிலம் டோங் மாவட்டம் டியோலி பகுதியை சேர்ந்த முக்த் பீகாரி தனது மனைவி ஹுடே தேவி, குடும்பத்தினர் நந்தி சோனி, ராகேஷ், நபீர் ஆகியோருடன் கும்பமேளாவுக்கு சென்றார்.
இந்நிலையில், அனைவரும் கும்பமேளாவுக்கு சென்றுவிட்டு இன்று காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். காரை திபேஷ் பர்வானி ஒட்டியுள்ளார். ஜஸ்தான் மாநிலம் துஷா மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் எதிரே வந்த லார் மீது வேகமாக மோதியது. இந்த கோர விபத்தில் காரில் பயணித்த 5 பேரும் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
காரை ஓட்டி வந்த திபேஷ் படுகாயமடைந்தார். அதேபோல், லாரி டிரைவரும், அவரது உதவியாளரும் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், படுகாயமடைந்த 3 பேரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், உயிரிழந்தவர்கள் 5 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post கும்பமேளாவில் பங்கேற்றுவிட்டு திரும்பியபோது கோர விபத்து: 5 பேர் உயிரிழப்பு! appeared first on Dinakaran.
