×

வராக்கடனை கார்ப்பரேட்டுகளுக்கு தள்ளுபடி செய்த மோடி அரசு விவசாயக் கடனை ஏன் தள்ளுபடி செய்யவில்லை? திமுக வர்த்தகர் அணி செயலாளர் கவிஞர் காசி முத்துமாணிக்கம் கேள்வி

சென்னை: திமுக வர்த்தகர் அணி மாநில செயலாளர் கவிஞர் காசிமுத்துமாணிக்கம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ஒன்றிய பட்ஜெட்டில் ஒரு வார்த்தை கூட தமிழ்நாடு என்று பெயர் வராமல் பார்த்துக் கொண்டது ஒன்றிய பாஜ அரசு. ஜிஎஸ்டிக்கான வரி பங்கீட்டில் தமிழகத்துக்கான பங்கீட்டை 65 சதவீதமாக உயர்த்துங்கள் என்றோம். ஆனால் 9 சதவீதம் குறைவாக 32 சதவீதம் மட்டுமே தந்துள்ளது.

பட்ஜெட் கூட்ட தொடருக்கு பார்வையாளராக சென்றிருந்தேன். பட்ஜெட் முழுவதும் பீகார், பீகார் என்று தான் இருந்தது. தென் இந்தியாவில் இருந்து ஒரு ஊர் பெயர் கூட வரவில்லை. காங்கிரஸ் காலத்தில் ஜிஎஸ்டி என்பது இல்லை. ஆனால் இப்போது எதற்கெடுத்தாலும் ஜிஎஸ்டி வரி கட்டுகிறோம். பிறகு எதற்கு தனியாக வருமான வரி கட்ட வேண்டும். எனவே, வருமான வரியையே நீக்க வேண்டும். அல்லது ரூ.30 லட்சம் வரை வருமான வரி இல்லை என்று அறிவிக்க வேண்டும்.

தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு ஏற்காததால் ரூ.2200 கோடியை தமிழகத்துக்கு தர மறுப்பதோடு, அதை மற்ற மாநிலங்களுக்கு பிரித்து கொடுக்கிறார்கள். எவ்வளவு தரம் தாழ்ந்த செயல்.மோடி அரசு பதவி ஏற்றது முதல் ரூ.25லட்சம் கோடி வராக் கடனை கார்ப்பரேட்டுகளுக்கு தள்ளுபடி செய்த மோடி அரசு விவசாயக் கடன் தள்ளுபடிக்கு எந்த அறிவிப்பும் இல்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post வராக்கடனை கார்ப்பரேட்டுகளுக்கு தள்ளுபடி செய்த மோடி அரசு விவசாயக் கடனை ஏன் தள்ளுபடி செய்யவில்லை? திமுக வர்த்தகர் அணி செயலாளர் கவிஞர் காசி முத்துமாணிக்கம் கேள்வி appeared first on Dinakaran.

Tags : Modi government ,DMK Traders' Team ,Kavinar Kasi Muthumanikgam ,Chennai ,Union BJP government ,Tamil Nadu ,Union Budget ,Dinakaran ,
× RELATED மார்க்சிஸ்ட் தலைவர்கள் முதல்வருடன்...