×

கஞ்சா வழக்கில் கைதான இருவர் மீது குண்டாஸ் பாய்ந்தது

புதுக்கோட்டை, பிப்.13: புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே கடந்த ஜன.11ஆம் தேதி 320 கிலோ கஞ்சா கடத்தி வந்ததாக, அம்மாபட்டினம் வடக்குத் தெருவைச் சேர்ந்த கமல்பாட்சா மகன் பாவா பக்ருதீன் (30), ஆவுடையார்கோவில் அதிராமங்கலத்தைச் சேர்ந்த சபாபதி மகன் மாரிமுத்து (69) ஆகிய இருவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

இவர்களை குண்டாஸ் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா பரிந்துரைத்திருந்தார். இந்தப் பரிந்துரையின்பேரில், இருவரையும் குண்டாஸ் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் அருணா நேற்று உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இருவரும், திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

The post கஞ்சா வழக்கில் கைதான இருவர் மீது குண்டாஸ் பாய்ந்தது appeared first on Dinakaran.

Tags : Gunmen ,Pudukkottai ,Kamalpatsa ,Bava Bakrudeen ,Ammapattinam North Street ,Sabapathi ,Marimuthu ,Avudayarkovil Athiramangalam ,Manamelkudi ,Pudukkottai district ,
× RELATED மூதாட்டிகளிடம் சில்மிஷம் வன்கொடுமை சட்டத்தில் வாலிபர் கைது