- வெண்ணைமலை பாலசுப்பிரமணியசாமி கோயில் தேரோட்டம்
- கரூர்
- அமைச்சர்
- செந்தில் பாலாஜி
- தைப்பூச தேரோட்டம்
- வெண்ணைமலை பாலசுப்பிரமணியசாமி கோயில்
- வெண்ணைமலை பாலசுப்பிரமணியசாமி
- கோவில் தேரோட்டம்
கரூர், பிப். 12: கரூர் வெண்ணைமலை பாலசுப்ரமணியசாமி கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு 15,000 பேருக்கு அன்னதானம் அமைச்சர் செந்தில் பாலாஜி வழங்கி தொடங்கி வைத்தார். வெண்ணைமலை பாலசுப்ரமணியசாமி கோவிலில் நேற்று தைப்பூச தேரோட்டம் நடைபெற்றது. தேரோட்டத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் அமைச்சர் செந்தில் பாலாஜி அன்னதானம் செய்வது உண்டு.இதன்படி இவ்வாண்டும் நேற்று காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை கோயிலுக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்க மாவட்ட திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. முன்னதான அன்னதானம் வழங்குவதற்காக கோயிலில் முன்புறம் பிரதான பந்தல் அமைத்து அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.
அன்னதான பணிகளை மேயர் கவிதா கணேசன், துணை மேயர் தாரணி சரவணன், கரூர் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் முத்துக்குமாரசாமி, வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் வி.கே.வேலுசாமி, மாநகரச் செயலாளர் எஸ். பி. கனகராஜ், பகுதி கழக செயலாளர்கள் கரூர் கணேசன், ஆர்.எஸ்.ராஜா, வக்கீல் சுப்பிரமணியன், ஜோதிபாசு, வி.ஜி.எஸ்.குமார், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வெங்கமேடு சக்திவேல், மாநகர துணை செயலாளர் வெங்கமேடு பாண்டியன், தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை அமைப்பாளர் கனிமொழி, செயற்குழு உறுப்பினர்கள் காலனி செந்தில் சாலை சுப்பிரமணியன் உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு அன்னதானம் பணியில் ஈடுபட்டனர். தேரோட்டத்தில் கலந்து கொண்ட சுமார் 15,000 பேருக்கும் மேல் அன்னதானம் அமைச்சர் செந்தில் பாலாஜி ஏற்பாட்டின் கீழ் வழங்கப்பட்டது.
The post வெண்ணைமலை பாலசுப்ரமணியசாமி கோவில் தேரோட்டம் appeared first on Dinakaran.
